இலங்கை அரசியல்யாப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் மீதான விவாதம் நாளை மறுதினம்வரை (ஏப்ரல் 21, 2015 செவ்வாய்க்கிழமை) பின்போடுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமூலம் நாளை திங்கட்கிழமை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதற்கு முன்பு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவாதத்தை செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகளின் பொது அமைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் செனிவிரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் 19ஆவது திருத்தச் சட்டம் சம்பந்தமாக சில இணக்கங்கள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. இதன்படி உச்சநீதிமன்றத்தின் முலம் அனுமதிக்கப் பட்டுள்ள திருத்தங்களை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதானால் அதற்கு ஆதரவளிக்க முடியுமென்று தனது கட்சி அறிவித்ததாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனிவிரத்ன, இதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்ததாகவும் கூறினார்.
அரசியல் யாப்பிற்கு முரணான எந்தவொரு திருத்தங்களும் இந்த விவாதத்தின்போது சமர்ப்பிக்கப்பட மாட்டாதென்று பிரதமர் உறுதிமொழியொன்றை வழங்கியதாக தெரிவித்த ஜோன் செனிவிரத்ன இதன்படி உச்சநீதிமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட திருத்தங்களுக்கு ஆதரவளிக்க தனது கட்சி தீர்மானித்ததாகவும் கூறினார்.
அதன்படி சம்பந்தப்பட்ட விவாதம் எதிர்வரும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்கள் நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நன்றி : BBC தமிழ் ஓசை