Friday, 24 April 2015

மீன் மொய்லி: மீன் குழம்பு

First wash the fish well, then put it in a pan with the lemon juice, salt and 1 tbsp ginger garlic paste and Freddie should be soaked for 30 minutes


என்னென்ன தேவை?


வாவல் மீன்/கிங்பிஷ் - 4 துண்டுகள், 
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது), 
பச்சை மிளகாய - 2 (நீளமாக கீறியது), 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன், 
மிளகு தூள் - 1 டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு, 
தேங்காய் பால் - 1 கப், 
கறிவேப்பிலை - சிறிது, 
கடுகு - 1 டீஸ்பூன், 
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், 
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன், 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், 
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது). 

எப்படிச் செய்வது?

முதலில் மீனை நன்கு சுத்தமாக கழுவி, பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். 

பின்பு அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேங்காய் பால் சேர்த்து கலந்து, கொதிக்க விட வேண்டும். குழம்பானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து, 7-8 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வாணலியை மூடி வைத்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். இறுதியில் மூடியை திறந்து, அதில் மிளகு தூளை தூவி கிளறி, பின் அடுப்பை அணைத்து, கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான கேரளா ஸ்டைல் குழம்பான மீன் மொய்லி ரெடி!!! இது சாதத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
Loading...
  • நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது15.05.2015 - Comments Disabled
  • அம்பாறை மாவட்ட நெற் களஞ்சியசாலை 12.02.2016 - Comments Disabled
  • கொழும்பின் முக்கிய பகுதிகளில் வாகன நெரிசல்02.10.2018 - Comments Disabled
  • Govt. Must Educate Importance Of International Participation In Trials05.02.2016 - Comments Disabled
  • இந்தியா சீனாவிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பெண்டகன் தெரிவித்துள்ளது.09.05.2015 - Comments Disabled