உலகிலேயே மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடு சுவிட்சர்லாந்து என்ற பெருமையை பெற்றுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் மொத்தம் உள்ள 158 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் சுவிட்சர்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை ஐஸ்லாந்து, டென்மார்க், நோர்வே மற்றும் கனடா ஆகிய நாடுகள் பிடித்துள்ளன.
நிலையான அபிவிருத்தி தீர்வு அமைப்பு நடத்திய இந்த ஆய்வில் டோகோ, புருன்டி, சிரியா, பெனின் மற்றும் ருவாண்டா ஆகிய நாட்டு மக்கள் நிம்மதியைத் தொலைத்து மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தந்துவிடாது. நேர்மை, பெருந்தன்மை, நம்பிக்கை மற்றும் நல்ல சுகாதாரம் வாழ்க்கைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போதைய மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை இந்த ஆய்வு வழங்கியுள்ளது.
உலகில் ஆண்களை விட பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாகவும், இந்த ஆய்வு கூறுகிறது.
இந்தப் பட்டியலில் இந்தியா 117வது இடத்திலும் இலங்கை 132ஆவது இடத்திலும் உள்ளன.
