பாகற்காய் - 1/2 கிலோ,
கடலை மாவு - 1/4 கப்,
அரிசி மாவு - 1/4 கப்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் - தேவைக்கு, சர்க்கரை - ஒரு சிட்டிகை,
இனிப்பு சட்னி, எண்ணெய்,
உப்பு - தேவைக்கு.
சாட்டுக்கு மேல் தூவ...
சாட் மசாலா - சிறிது,
எலுமிச்சை (விருப்பப்பட்டால்) - சிறிது,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,
வெங்காயம் - தேவைக்கு,
மிளகாய் தூள் - சிறிது.
எப்படிச் செய்வது?
பாகற்காயை மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். அதில் உப்பு, பொடித்த சர்க்கரை, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்க்கவும். தண்ணீர் அதிகமாக இருந்தால் எடுத்து விட்டு வெயிலில் காய வைக்கவும். 3 நாள் காயவிட்டு எடுத்து, அதில் அரிசி மாவு, கடலை மாவு தேவைக்கு தண்ணீர் தெளித்து பிசறி, மொறு மொறுப்பாக பொரித்து எடுத்து பின் சாட்டாக பயன்படுத்தவும். அலங்கரிப்பதற்கு கொடுத்த பொருட்களால் அலங்கரித்து, இனிப்பு சட்னி சேர்த்துப் பரிமாறவும்.
