ஊட்டி தாவரவியல் பூங்காவின் மேற்பகுதியில் இத்தாலியன் கார்டன் அருகே உள்ள கண்ணாடி மாளிகையில் 72 வகை யான பச்சை வண்ண கள்ளி செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் ஆய்வு நிறுவனத்தின் மூலம் திசு வளர்ப்பு முறை யில் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள், ரோஸ் உள்ளிட்ட வண்ணங்களில் உருவாக்கப்பட்ட வண்ண கள்ளி செடிகள் ஊட்டி தாவரவி யல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இவை தாவரவியல் பூங்காவின் மேற்பகுதியில் உள்ள நர்சரியில் பதிய முறையில் வளர்க்கப்பட்டு பூங்காவின் பல பகுதிகளி லும் வைக்கப்பட உள்ளன. இதேபோல் மூன்று வகை யான ஆர்க்கிட் மலர்கள் மற்றும் மினியேச்சர் ரெட்லீப் செடி, ஜெர்ரிபரா உள்ளி ட்ட செடிகளுக்கும் கொண்டு வரப்பட்டுள் ளன. இவை பூங்காவில் உள்ள கண்ணாடி மாளி கையில் இன்று முதல் அடுக்கி வைக்கப்பட உள் ளன. விரைவில் இவற்றை பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
