Monday, 27 April 2015

S.H.M.ஜெமீல் அவர்கள் இன்று (27.04.2015) காலமானார்கள்


கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது
பதிவாளரும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்
அமைச்சின் முன்னாள் செயலாளரும், கல்முனை
ஸாஹிறாவின் முன்னாள் அதிபரும் பிரபல
கல்வியயளாலருமான காலாநிதி அல்ஹாஜ்
S.H.M.ஜெமீல் அவர்கள் இன்று (27.04.2015) காலமானார்கள்.
இலக்கியம், கலை, கல்வி, கலாசாரம் முதலிய பல
துறைகளில் புத்தகங்களையும், ஆக்கங்களையும்
வெளியிட்ட அன்னார், அண்மையில் தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் பிரதான நூலகத்திற்கு தனது
சேகரிப்புக்களை கையளித்திருந்தம
ை குறிப்பிடத்தக்கது.
தேசிய ஷூரா சபையின் நிபுணத்துவ ஆலோசனை
சபையில் உறுப்பினராகவும் அண்மைக்காலமாக சமூக
மற்றும் தேசிய உணர்வுடன் பங்களிப்புச் செய்தமை
குறிப்பிடத்தக்கது.
அவரது குற்றங் குறைகளை மன்னித்து, நல்லமல்களை
அங்கீகரித்து மேலான சுவனத்தை எல்லாம் வல்ல
அல்லாஹ் பரிசளிப்பானாக!

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

Loading...