முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் 2000 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் கண்மூடித்தனமாக கடன் வழங்கப்படுவதாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட கருத்து தொடர்பில் இவ்வாறு வழக்கு தொடரவுள்ளதாக ரவி தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சரை நித்திரை விட்டு தெளிவான நிலையில் கருத்து வெளியிடுமாறு கொழும்பில் இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் ரவி கருணாநாயக்க கேட்டுக் கொண்டார்.
மஹிந்த ராஜபக்ஷ மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தனது சட்டத்தரணியிடம் கோரியுள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
ஊழல் மோசடி நிறைந்த அபிவிருத்தி திட்டங்கள் சிலவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனையவை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து விவாதிக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு சவால் விடுப்பதாகவும் வேண்டுமானால் முன்னாள் ஜனாதிபதி இருக்கும் இடத்திற்குச் செல்ல தான் தயார் என்றும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
