ஜப்பானின் இஷுதீவு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் தெற்கு ஜப்பானில் உள்ள தீவுகளில் உணரப்பட்டன.
அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கினர். அங்கு 5.9 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானின் இஷு தீவுகள், ஹஜிஜோஷிமா உள்ளிட்ட தீவுகளில் பேரலைகள் தாக்கின. வழக்கத்தை விட 1 மீட்டர் (3.3. அடி) உயரத்துக்கு அவை எழும்பியது.
அதைத்தொடர்ந்து இஷு தீவுகள், தெற்கு டோக்கியோ, ஒசாசவரா ஆர்சிபெலாகோ பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
அங்கு கடற்கரை பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
நிலநடுக்கம் மற்றும் காயம் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட 2 மணி நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
