Tuesday, 5 May 2015

சுனாமி எச்சரிக்கை.பபுவா நியூகினியாவில் 7.4 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Magnitude-Quake-Rocks-Papu


பபுவா நியூகினியாவில் 7.4 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து 300 கிலோ மீட்டர் தூரத்தில் சுனாமி அலைகள் தாக்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

பபுவா நியூகினியாவின் ராபவுல் டவுனிற்கு தெற்கே, சுமார் 154 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பப்புவா நியூக்கினியாவியை சுற்றிலும் 300 கிலோ மீட்டருக்குள் சுனாமி ஏற்பட வாய்ப்பிருப்பதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்து உள்ளது. நகரில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.


Loading...