Monday, 25 May 2015

சுதந்திர கட்சியில் ஐக்கிய தேசிய கட்சியின் சில உறுப்பினர்கள்




ஐக்கிய தேசிய கட்சியின் சில உறுப்பினர்கள் தேர்தலுக்கு முன்னர் சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரீ.பி. ஏக்கநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில்விக்ரமசிங்கவின் செயற்பாடுகள் காரணமாகவே அவர்கள் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் விரைவில் இந்த கட்சி மாற்றம் இடம்பெறும் என்றும் அவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...