Saturday, 2 May 2015

சந்திரனிடம் சனி வந்தால்..



சந்திரன் இருக்கும் அதே இடத்தில் மற்ற கிரகங்கள் இருந்தால், பூமியில் இருப்பவர்களுக்கு அது எப்படி தெரியும்? இப்படி கற்பனை குதிரையை ஓடவிட்டார் ஓவியரான ரோன் மில்லர். மரணப் பள்ளத்தாக்கு பகுதியில், ஒரு சாலையிலிருந்து நிலாவை படம்பிடித்த புகைப்படத்தை, அந்த கற்பனையை செயல்படுத்த உபயோகித்தார் மில்லர். பூமியின் குறுக்களவில் கால்வாசி உள்ளது சந்திரன். 

அந்த இடத்தில் சனி கிரகத்தை அதன் வளையத்துடன் வைத்தால் எப்படி தெரியும்? சந்திரனை விட 35 மடங்கு பெரிய கிரகம் சனி. சந்திரன் பூமியிலிருந்து காட்சிக் களத்தில் அரை பாகை அளவை எடுத்துக்கொள்ளும். 
அந்த இடத்தில் சனியை வைத்தால் வானில் நம் பார்வைக்கு 18 பாகை அளவுக்கு அது அடைத்துக்கொள்ளும். சனியின் துணைக் கோளான டியோனைவிட பூமி சற்று தொலைவில் இருக்கும். சொல்லப்போனால் சனி கிட்டே வந்தால், பூமியே அதன் துணைக் கோள் போலத்தான் தெரியும். சனி கிரகத்தின் வளையம் பூமியிலிருப்பவர்களுக்கு கண்ணுக்கெட்டிய துாரம் வரை வானில் தெரியும். 
படத்திலிருப்பது வெறும் போட்டோஷாப் ட்ரிக் தான். ஆனால், அந்த கோணத்தில் பிரம்மாண்டமாக சிந்தித்தாரே ரோன் மில்லர். அங்கேதான் அவர் நிற்கிறார். 
Loading...