நேபாளத்தில் அடிமைத் தொழிலுக்கும், பாலியல் தொழிலுக்கும் குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நேபாளத்தில் சிறுமிகள், பெண்கள் பாலியல் தொழிலுக்கும், அடிமைத் தொழிலுக்கும் கடத்தப்படுவது அதிகம். ஆண்டுதோறும் குழந்தைகள், பெண்கள் என 5000ல் இருந்து, 10,000ம் பேர் நேபாளத்திலும், அங்கிருந்து இந்தியாவிற்கும் கடத்தப்படுகிறார் என்பது கூடுதல் தகவல். தற்போது இந்த நில நடுக்க பாதிப்பை பயனபடுத்தி உணவு இல்லாமால் வீடு இல்லாமல் தவிக்கும் சிறுமிகளையும், பெண்களையும் தங்கள் இலக்காக கொண்டு கடத்தல்காரர்கள் செயல் படுகிறார்கள். நிலநடுக்கம் புரட்டிப்போட்ட கிராமங்களில் ஏராளமானோர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர்கள் அனைவரும் கடத்தப்பட்டார்களா என்பது பற்றி தகவல் இல்லை.
