Sunday, 17 May 2015

இராஜினாமா :அமைச்சரவை அமைச்சர்கள் நால்வரும், இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் !!


Slfp

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொண்ட அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நால்வரும், இராஜாங்க அமைச்சர்கள் இருவரும் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளுராட்சி சபைகளுக்கு ஆணையாளர்களை நியமிக்க ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவர்கள் தமது பதவிகளை இழக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, குருணாகலையில் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீ.ல.சு.கட்சியின் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் பலர் கலந்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் ஆதாரத்துடன் கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுத்துக் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Loading...