Sunday, 3 May 2015

கிழக்கு மாகாண மக்களுக்கான அன்பான அறிவித்தல்:

Munas Mps
நமது சமூகம்,நமது சூழல், நமது பாடசாலை, நம்பிள்ளைகள் என்றுமே நன்றாக இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவோம். இது சுயநலமாக எடுத்துக் கொள்ள முடியாது.. இன்று கிழக்கில் கல்விக்கு பாரிய திட்டமிடப்பட்ட சதிகள் நடக்கிறதா..? அல்லது தனக்கு எல்லாம் இருந்தால் போதும் மற்றவர்களைப் பற்றி எமக்கென்ன தேவையும் சிந்தனையும் என்ற எண்ணமா..? என்ன நடக்கிறது என்றே புரிய வில்லை. சிந்திப்போம்!! கிழக்கில் அம்பாரை மாவட்டத்தில் College முடித்து வெளியான ஆசிரிய ஆசிரியைகளுக்கு எதிர்வரும் 7ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளது. ஆனால் எந்த நியமனமும் அம்பாரை மாவட்டப்பாடசாலைகளில் கடமைபுரிவதற்கானவைகளல்ல. இது சம்மந்தமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கல்விப்பணிப்பாளருக்கு கட்டாயம் உத்தரவாக கிழக்கு மாகாண ஆசிரியர்களை வேறு மாகாணங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று உத்தரவிட்டதன் பின்னரும், என்னை எதுவும் செய்ய விடாமல் இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தான் விரும்பியமாதரி நடந்து கொள்கின்றார் என்று அவர் மழுப்புவதும் மிகவும் வேதனையானதும் கவலையானதுமாகும். கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை யாரும் தொடர்பு கொண்டு பேசும் நிலையில் இல்லாத மனிதநேயமற்ற ஒருவரை நியமித்துள்ளமையும் இங்கு குறிப்பிட்டுக் காட்டவேண்டும். கல்வி அமைச்சரின் செயலாளரின் கூற்றுப்படி கிழக்கில் எந்த வலையத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை. இதுவரை எந்த வலையத்தில் இருந்தும் ஆளணிப்பற்றாக்குறை என்ற கடிதமே வரவில்லை என்று கூறுகிறார். என்றால் இதற்கான முழுப்பொறுப்பினையும் கிழக்கு மாகாணத்தில் இருக்கும் அனைத்து வலையக்கல்விப்பணிப்பாளர்களுமே! ஏற்றெடுக்க வேண்டும் என்ற தகவலையும் தெரிவிக்க விரும்புகிறேன். வலையக் கல்விப் பணிப்பாளர்களின் அசமந்தப்போக்கே பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை என்ற குற்றச்சாட்டு வருவதற்க்கு முதல் இதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் தன் பதவியைப்பாதுகாத்துக்கொண்டால் போதுமானது என்றிருக்காமல் இன்றைய மாணவர்களின் நலன் கருதி தனக்கு வழங்கப்பட்டுள்ள அமானிதத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். கல்விப்பணி செய்ய முன்வந்திருக்கும் ஆசிரியர்களுக்கு தண்டனை கொடுப்பது போன்று மாகாணம் விட்டு மாகாணம் அனுப்புவது அதிலும் பெண் ஆசிரியைகளை கண்ணைக் கட்டி விடுவது போன்று வெளி மாவட்டம், மாகாணங்களுக்கு அனுப்பி விடுவதும் இவைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நியாயமான விடையமா..? எனவே மனிதர்களாக மட்டுமன்றி மனிதப்புனிதர்களாகவும் வாழவேண்டும் என்றால் தங்கள் கடமையினைச் சரியாகவும், தைரியமாகவும் செய்யவேண்டும். எனவே எதிர்வரும் 7ஆம் திகதி கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வழங்கப்படவிருக்கின்ற நியமனம் எக்காரணம் கொண்டும் வெளிமாகாணங்கள்,அல்லது வெளி மாவட்டங்களுக்கு செல்வதாக இருக்கக் கூடாது. என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அத்துடன் உடனடியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை இடமாற்றம் செய்யவேண்டும். மனிநேயமுள்ள ஒருவர் கல்வி அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படவேண்டும், பணத்துக்காக பலதும் செய்யும் தேசத்துரோகிகளை தூக்கி வீசிவிட்டு நாட்டில் ஏற்பட்டிருக்கும் நல்லாட்சியில் நல்லவை மட்டும் நடக்க நாமும் குரல் கொடுப்போம்..
Loading...