Friday, 8 May 2015

கடத்தல்காரனுக்கு போய் இவ்வளவு மரியாதை ஏன் செய்யவேண்டும் என்று இந்தோனேசியா கருதுகிறது


.மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு , இந்தோனேசியாவில் கொல்லப்பட்ட மையூரனின் உடல் அவுஸ்திரேலியா கொண்டுசெல்லப்பட்டது யாவரும் அறிந்ததே. இன் நிலையில் அவரது இறுதிக் கிரியைகள் , வரும் சனிக்கிழமை அவுஸ்திரேலிய நேரப்படி காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகும் என அவர்களது பெற்றோர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள். மையூரனின் சகோதரர் மற்றும் சகோதரி, அவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்று பலரும் அங்கே உரையாற்ற உள்ளார்கள். இதேவேளை அவுஸ்திரேலிய அதிகாரிகளும் வந்து இதில் கலந்துகொண்டு அவருக்கு மரியாதை செலுத்தவுள்ளார்கள்.

இதனால் இந்தோனேசியா மேலும் அத்திரமடைந்துள்ளது எனக் கூறப்படுகிறது. மையூரனின் தகனம் மிகவும் மரியாதையாக செய்யப்படவுள்ளது. இதனால் இந்தோனெசிய அரசின் முகத்தில் கரி பூசப்படவும் உள்ளது. ஒரு கடத்தல்காரனுக்கு போய் இவ்வளவு மரியாதை ஏன் செய்யவேண்டும் என்று இந்தோனேசியா கருதுகிறது. ஆனால் அவுஸ்திரேலியா மற்றும் உலகத்தில் வாழும் பலரும் ஒரு திருந்தி வாழ்ந்த மனிதராக , மையூரனைப் பார்க்கிறார்கள். அவர் நல்லதொரு மனிதராக தனது இறுதி நாட்களை கழித்துள்ளார்.

ஒரு மனிதன் திருந்தி வாழ்வது என்பது தான் இந்த உலகில் சிறந்த விடையமாக கருதப்படுகிறது. இருப்பினும் அவர் உயிரை இந்தோனேசியா பறித்தது. ஆனால் அவருக்கான ஆதரவு பன்மடங்காகப் பெருகியுள்ளது. சனிக்கிழமை நடக்கவுள்ள கிரியைகளை நேரடியாக TV இல் கொண்டுவர ஸ்கை தொலைக்காட்சி(Skynew) குழுவினர் அவுஸ்திரேலியா விரைந்துள்ளார்கள். மேலும் உலகில் உள்ள பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனை லைவாக கவர் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்கள். கிரியை நிகழ்வுகள் அதிர்விலும் நேரலையாக வரும். அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்

Loading...