பேட்டி கண்டவர் ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்
பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 19வது திருத்தச் சட்டத்துக்கு எந்த நோக்கத்தின் அடிப்படையில் நீங்கள் வாக்களித்தூள்ளீர்கள்?
அமீர் அலி:- 19வது திருத்தச் சட்டத்துக்கு நான் மாத்திரமல்ல ஒட்டு மொத்த பாராளுமன்ற உருப்பினர்களும் வாக்களித்த நிலையில் ஒருவர் மாத்திரமே எதிராக வாக்களித்துள்ளார். எங்கள் கட்சியானது கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அதிரடியாகவும், தைரியத்துடனும் செயற்பட்ட கட்சியாகும். பொதுவாக நாட்டில் பேசப்பட்டு வரும் விடயமாக இருப்பதானது ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் தலைக்கு மேல் இருப்பதாகவும், 18வது திருத்தச் சட்டத்தில் இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற கதையுமாகும். பொதுவாக இருகின்ற ஜனாதிபதி முறைமையானது சிறந்த முறைமை என்று சொல்லப்பட்டாலும் கூட வரலாற்றை பிரட்டிப் பார்ப்போமானால் அம்முறைமையினால் சிறுபான்மை சமுகங்களின் முக்கிய உரிமை சம்பந்தப்பட்ட விடயங்களில் எந்த நன்மைகளும் கிடைத்ததாக நான் நினைக்கவில்லை. ஆகவே இவ்வாறன விடயங்களில் நானும் எனது கட்சியும் தெளிவுகண்டமையினால் 19வது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவள்ளிக்கும் முடிவினை எடுத்தோம்.
அஹமட் இர்ஸாட்:- இந்த 19வது திருத்தச்சட்டம் முற்றாக அமுல்படுத்தப்பட்டும், தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்படும் பட்சத்தில் உங்களுடைய எதிர்கால பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பாதுகாக்கக்கப்படும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கின்றதா?
அமீர் அலி:- தேசியத்திலே ஒருவருடைய நன்மைகள் அதிகமா? அல்லது பலருடைய நன்மைகள் அதிகமா? என்ற பார்வை முக்கியமாக இவ்விடத்தில் இருக்கின்றது. பொதுவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகப்படியான வாக்குகளை வைத்திருக்கும் கல்குடா தொகுதிக்கு பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள வெண்டும் என்ற தைரியம் கல்குடா மக்களுக்கு இருக்கின்றது என நான் நினைக்கின்றேன். வர இருக்கின்ற 20வது திருத்தச் சட்டம்தான் தேர்தல் முறை பற்றிய சட்டத்திருத்தமாக வரயிருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொகுதிவாரியாக மட்டக்களப்பு, பட்டிருப்பு, கல்குடா என்று பார்க்கும் பொழுது முஸ்லிம்கள் பிரதிநித்துவத்தை பெற்றுக்கொள்வது பகற்கனவாகவே அமையும். வரலாறும் அதற்கு சாட்சியாகவே உள்ளது. அந்த வகையிலே எதிர்காலத்தில் ஏராவூர் மக்களின் புதிய அரசியல் மாற்றத்துடன் கல்குடாவுடன் இணைந்து செயல்படுவார்களாயின் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதி ஒருவரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக நினைக்கின்றேன். ஆனால் ஏராவூரானது முன்பைப்போல் காத்தான்குடியுடன் இணைக்க்கப்பட்டும் மட்டக்களப்பு தொகுதியாக மாற்றப்படும் பட்ச்சத்தில் எமது பிரதி நிதித்துவத்துக்கான வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது எனபதே எனது கருத்தாகும்.
அஹமட் இர்ஸாட்:- கல்குடாவில் உங்களுடைய அரசியலை எடுத்துக் கொண்டால் உங்களுக்கெதிரான அரசியல் சக்தி இருந்து கொண்டே வருகின்றது. ஆனால் தற்போது உங்களுக்கெதிராக செயற்படும் அரசியல் சக்தி கூடுதலாக இருக்கும் இடமாக சொல்லப்படும் வாழைச்சேனயில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்கள் மூலமாக அறியக்கிடைக்கின்றது. இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன?
அமீர் அலி:- ஒரு தேர்தல் வருக்கின்றபோது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு இருப்பதானது சர்வசாதாரன விடயமாகும். அதில் கல்குடா விதிவிளக்கல்ல. பாராளுமன்ற பிரதிநிதிதுவத்தை வைத்திருந்த கல்குடா பிரதேசம் கடந்த நான்கு வருடங்களாக அதனை இழந்திருந்தது. இந்த இழப்பிற்கு காரணமாய் அமைந்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதற்குப்பிற்பாடு அந்த சமூகத்தை பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு கல்குடா மக்களிடத்தில் இருக்கின்றது. அதனோடு மக்களினால் என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நான் உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் கல்குடாவில் உள்ள வாழைச்சேனை பிரதேசத்தில் புதியமாற்றம் ஏற்பட்டுள்ளதனை நான் உணர்கின்றேன். ஆகவே தற்போது நாங்கள் கல்குடாவில் ஓவ்வொருவருடைய பிரச்சனைகளையும் தனிப்பட்ட முறையில் கலந்தாலோசித்து தீர்க்கமான முடிவினை எடுத்து வருக்கின்றோம். அதனடிப்படையில் கல்குடாவில் ஏற்பட்டுள்ள இம்மாற்றமானது மாவட்டத்தில் அரசியல் ரீதியாக பாரியளவிலான மாற்றத்தை கொண்டுவருவதற்கு வித்திடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- நீங்கள் பிரதி அமைச்சராக பதவி ஏற்றதற்குப் பிற்பாடு ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்தில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் முதற்கட்டமாக மாவட்டத்தில் அரச, அரசியல், நிருவாக உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக கூறியிருந்தீர்கள். அப்படி வெளிச்சம் போட்டு காட்டியுள்ளீர்களா?
அமீர் அலி:- நூறுநாள் வேலைத்திட்டத்துக்குள் நான் அவ்வாறு வெளிச்சம் போட்டுக் காட்டுவேன் எனக் கூறவில்லை. மாவட்டத்திலும் மட்டுமல்லாமல் தேசிய ரீதியாக அதனை செய்ய வேண்டும் என்ற கருத்தினையே நான் கூறியிருந்தேன். அதனை இப்பொழுது எனது அமைச்சில் இருந்து ஆரம்பித்துள்ளோம். மாவட்டத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதனை செய்து வருக்கின்றார்கள். எனக்கு கிடைத்த முறைப்படுகளை எல்லாம் உரிய தினைக்களகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இதில் நானாகவே தேடிச் சென்று ஊழல் செய்தவர்களை பழிவாங்க வேண்டும் என எப்போதும் நினைத்து அரசியல் செய்தது கிடையாது. ஆனால் ஊழலில் ஈடுபட்டவர்களின் ஆதாரபூர்வமான விடயங்கள் என்னிடம் வருக்கின்ற பொழுது அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பின் நிற்கமாட்டேன்.
அஹமட் இர்ஸாட்:- காத்தான்குடியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா மற்றும் அதே ஊரான மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் போன்றவர்கள் உங்களுடைய கட்சியை விட்டு வெளியேறி உள்ளமையானது உங்களுடைய கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு கிழக்கு மாகாணத்தில் கிடைததுள்ள பாரிய இழப்பாக நீங்கள் கருதவில்லையா?
அமீர் அலி:- காத்தான்குடியை பொருத்தவரையில் ஹிஸ்புல்லா தள்ளி நிற்கின்றார் என்ற விடத்தை நாங்கள் ஒரு போதும் இழப்பாக பார்ப்பதில்லை. தேசியத்தில் ஹிஸ்புல்லா யார் என்று எல்லோருக்கும் தெரியும். அவரை தேவைப்பட்டால் எடுக்கலாம் அல்லது இல்லாவிடால் விட்டுவிடலாம். அவ்வாறான ஒருவர்தான் ஹிஸ்புல்லா. மஹிந்த ராஜபக்ஸ்ஸ கூட அவரை ஒரு முறை அரசியல் வியாபாரி என்று கூறியுள்ளார். இன்னும் சொல்லப் போனால் ஹிஸ்புல்லா ஓ வகை குறுதியை சேர்ந்தவர் ஏன்னென்றால் அவர் எல்லோருக்கும் வழங்கக் கூடியவர். ஆகவே இவர்கள் சென்று விட்டார்கள் என்பதற்காக அகில இலங்கை மகள் காஙிரஸ் அழிந்து விடப்போவதுமில்லை, எங்களுடைய அரசியலில் வீழ்ச்சி ஏற்படப் போவதுமில்லை. காலத்துக்குகாலம் அரசியல் சதுரங்கத்தில் மற்றம் ஏற்படுவது சர்வசாதாரன விடயமாகும்.
அஹமட் இர்ஸாட்:- சென்ற ஜானாதிபதி தேர்தலின் போது ஏன் மைத்திரிபால சிறீசேனவுக்கு ஆதரவளிகவில்லை என்ற கேள்வியினை ஹிஸ்புல்லாவிடம் கேட்ட வேலையில் அமீர் அலியை போன்று தேசியப்பட்டியலை பெற்றுக்கொண்டு என்னால் மனச்சாட்சிக்கு துரோகம் செய்ய முடியாது என உங்கள் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார். அதனை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?
அமீர் அலி:- இலங்கையில் இருக்கும் அரசியல் வாதிகளில் முழு பொய்யனென்று சொல்லப்படுபவர்தான் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்.அவர் எங்கேயாவது உண்மை பேசுவார் என்று யாராலும் சொல்ல முடியாது. அவருடைய பிள்ளை குட்டிகள் கூட அவரை நம்பமாட்டார்கள் ஏன்னென்றால் அவ்வாறு மொத்தமாக பொய் சொல்லக் கூடிய அரசியல்வாதி என்பதை நன்றாக விளங்கிவைத்திருக்கின்றார்கள். அதனை தேசியமும், காத்தான்குடியில் இருக்குகின்ற சமூகமும் முழுமையாக நம்புக்கின்றது. மற்றவர் மீது பழிசுமத்துக்கின்ற விடயத்தைதான் அவருடைய அரசியல் ஆயுதமாக பயண்படுத்தக் கூடியவர். நான் முதன் முதலில் பாராளுமன்றம் தேர்தலில் இறங்கிய பொழுது கூட அமீர் அலியினால் பாராளுமன்ற கதிரையில் உட்கார முடியுமா என கேளி செய்து மேடைகளில் பேசியவர். ஒருவனுடைய தைரியம் என்பதும் கெட்டித்தனம் என்பதும் அவனுக்கு கொடுக்கப்படுக்கின்ற அதிகாரத்திலும் அவன் எடுத்துக்கொள்கின்ற வேலைத்திட்டத்திலும்தான் இருக்கின்றது. அவனுடைய பார்வை உள்ளத்தில் இருக்க வேண்டும் ஏன் என்று சொன்னால்? ஹிஸ்புல்லா என்பவர் மாவட்டத்தை பற்றியோ சமூகத்தை பற்றியோ தூர நோக்கு இல்லாதவர். அவர் எதை எடுதுக்கொண்டாலும் அக்காலகட்டத்தில் இருக்கின்ற அரசாங்கங்களுக்கு சாமரை வீசுகின்ற அரசியல்வாதியாகவே இருந்து வந்திருக்கின்றார்.
அந்தவகையிலே இவருக்கு முதலமைச்சர் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக அப்போது அமைச்சர்களாக இருந்த நானும் ரிசாட் பதுர்டீனும் எங்களுடைய அமைச்சுக்களையே துறப்பதற்கு தயாராக இருந்த வேலையிலே மஹிந்த ராஜபக்ஸ்ஸவிடம் சென்று நானாகவே முதலமைச்சு பதவி கேட்கவில்லை அமீர் அலியும் ரிஸாட்டும் விடாத காரணத்தினால்தான் நான் கேட்டேன் என்று மஹிந்தவின் கால் கைகளை பிடித்து கெஞ்சிக் கூத்தாடுக்கின்ற விளக்கங்கள் அவரிடம் பலவகையாக உள்ளது. இப்படி நடந்து கொள்ளும் அரசியல்வாதி அமீர் அலி இல்லை. நன் ஓர் அளவு கல்வி கற்றவன் என்றடிப்படையில் மாவட்டத்தை, தேசியத்தை, தமிழர்களை, பற்றிய தூர நோக்கு என்னிடம் உள்ளது. தம்புள்ளை பள்ளிவாயல் உடைக்கப்பட்ட பொழுது எங்கே பள்ளிவாயல் உடைக்கப்பட்டது எனக் பகிரங்கமாக கலிமாச் சொன்ன அரசியல்வாதியாக கேடவர்தான் ஹிஸ்புல்லாஹ். அதே போன்று காத்தான்குடியில் முஸ்லிம் மக்களுக்கு காணிப்பிரச்சனைகள் இருகின்றது என நாங்கள் கூறிய பொழுது முஸ்லிம்களுக்கு காத்தான்குடியில் காணிப்பிரச்சனை இல்லை என்று தேசியத்திலே சொன்ன மாமேதைதான் ஹிஸ்புல்லாஹ். அது மட்டுமல்லாமல் காத்தான்குடி அல்லது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற எந்தவொரு மலசல கூடமாக இருந்தாலும் சரி அவருடைய பெயரைத்தான் வைக்க வேண்டும் என விருபுக்கின்ற ஒரே ஒரு அரசியல்வாதியுமாவர். ஆகவே இவருடைய குற்றச்சாட்டுக்களை நான் ஒரு போதும் கணக்கில் எடுக்கப் போவதுமில்லை, அத்தோடு மக்களும் அவருடைய குற்றசாட்டுக்களைப் பற்றி அலட்டிக்கொள்ள மாட்டார்கள் என்பது உண்மையான விடயமாகவே காணப்படுகின்றது.
தேசியபட்டியல் எடுத்துத் தந்ததாகவும் நான் மஹிந்தவுக்கு துரோகம் செய்ததாகவும் ஹிஸ்புல்லாஹ் கூறுகின்றாறே!. அப்படியென்றால் அக்ககரைப்பற்று அதாவுல்லா இன்று வரைக்கும் விசுவாசத்திற்காக மஹிந்தவின் பக்கமே இருக்கின்றார். அதுதான் விசுவாசம். இவரைப் போன்று அதாவுல்லா மைத்திரிபால சிறீசேன வெற்றி பெற்ற அடுத்த நாளே பின்கதவினால் சந்திரிக்காவினை பார்ப்பதற்கு செல்லவுமில்லை. எனது தலைவர் மைத்திரிபால சிறீசேன என அறிக்கை விடவுமில்லை. எனக்கு தேசியப்பட்டியலை விட்டுக்கொடுப்புச் செய்த அஸ்வர் ஹாஜி கூட இன்னும் ஊடகங்களுக்கு எதுவித கருத்தினை எனக்கெதிராக தெரிவிக்காத இடத்தில் ஹிஸ்புல்லாக்கு என்ன அருகதை உள்ளது எனது தேசியப்பட்டியல் உறுப்புரிமை பற்றி கதைப்பதற்கு? என்ற கேள்வியையும் அமீர் அலி தொடுத்தார்.
அஹமட் இர்ஸாட்:- சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் அன்மைக் காலமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல அரசியல் முன்னெடுப்புக்களை செய்து வருக்கின்றது. அந்த வகையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசினால் ஏதாவது சாதிக்கலாம் என்று?
அமீர் அலி:- எதிர்காலத்தில் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைமையினை உறுவாக்குவதற்கான வழியமைத்துக் கொடுக்கின்ற தார்மீகப் பொறுப்பு அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு இருக்கின்றது ஆகையால் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரசானது அம்பாறை மவட்டத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தையாவதும் கைப்பற்றும் என நாங்கள் நம்பிகையுடன் இருக்கின்றோம்.
வருக்கின்ற தேர்தல் பொதுத்தேர்தல் என்றபடியினால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரசினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக அவர்களிடத்தில் பலமான குற்றச்சாட்டு இருந்து வருக்கின்றது. தேர்தல் காலங்களில் மட்டும் முஸ்லிம் வாக்காளர்களை ஓர் கருவியாக முஸ்லிம் காங்கிரஸ் பயண்படுத்திக் கொள்கின்றது என்ற குற்றச்சாட்டானது கற்ற சமூகத்திலும் பாமரமக்கள் மத்தியிலும் இருந்து வருக்கின்றது. அன்று நாங்கள் முஸ்லிம் காங்கிரசினை விட்டு பிரிந்து புதுக்கட்சியினை ஆரம்பித்த வேலையிலே அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேலையில் எங்களை அப்பிரதேச மக்கள் துரோகிகளாக பார்த்ததினை நாங்கள் கண்கூடாக கண்டோம். ஆனால் இப்போது முற்றிலும் மாற்றமான முறையில் கல்குடாவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினை போல அம்பாறை மாவட்டத்திலும் பாரிய மாற்றமும், வரவேற்பும் எங்களுக்கு இருப்பதாகவே தோன்றுகின்றது.
அந்த வகையிலே ஒவ்வொரு பிரதேசங்களில்லும் இருந்து மக்கள் எங்களை வரச் சொல்லுகின்றனர். படித்த சமூகம் எங்களோடு பேசுகின்றது. மாற்றத்தையும் விருபுவதாக கூறுக்கின்றனர். கடந்த மஹிந்த அரசாங்கத்தை எவ்வாறு வீட்டுக்கு அனுப்பினீர்களோ அதே போலவே அரசியல் தாகத்தில் இருக்கும் எங்களின் ஆசைகள், வேண்டுகோள்கள் பத்திரிகையில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது என்ற பலமான குற்றச்சாட்டோடு அவர்களுடைய உணர்வுகள் மதிக்கப்படவில்லை, பிரதேசம் அபிவிருத்தி செய்யப்படவில்லை, அவர்களுடைய அடிப்படைதேவைகள் விடயத்தில் பேசப்பட வேண்டிய நேரத்தில் எதுவும் பேசப்படவில்லை போன்ற விடயங்களையெல்லாம் வைத்து அப்பிரதேசத்தில் இருக்கும் பாரிய முஸ்லிம் சமூகம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசினை நோக்கி அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நானும் கட்சியின் தலைவர் ரிசாட் பதுர்டீன், மற்றும் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட் ஆகியோர்கள் அங்கு இரண்டு நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த வேலையில் அம்மக்களால் எமக்கு அமோக வரவேற்பளிக்கப்படதினாலும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கப்பட்டதினாலும் அங்கிருக்கின்ற மக்களின் குறைகளையும் அவர்களுடைய அரசியல் நிலைமைகளை நேரடியாகவும், மிக உன்னிப்பாகவும் கண்டறிந்து கொண்டோம். அதனாலேயே எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் நிச்சயமாக நல்லதோர் சந்தர்ப்பத்தை அப்பிரதேச மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இம்முறை எமது கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் களத்தில் இறங்க இருகின்றது.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய அரசியல் கோட்டையாக கருதப்படும் கல்குடாவில் புதுமுக வேட்பாளராக றியால் எனப்படும் இளைஞன் களமிறக்கப்படவுள்ளதாக பரவலாக பேசப்படுகின்ற நிலையில் இவற்றுக்கான மாற்று அரசியல் நடவடிக்கைகளாக எதனை கையாள திட்டமிட்டுள்ளீர்கள்?
அமீர் அலி:- அரசியல் என்று வருக்கின்ற பொழுது கல்குடாவில் எந்தவொரு மகனுக்கும் எதிர்த்து அரசியல் செய்வதற்கு உரிமை இருக்கின்றது. சென்ற முறையும் என்னை கல்குடாவில் இருந்து தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சகோதரர் ஹுசைனும் , லெப்பை ஹஜியும் முஸ்லிம் காங்கிரசின் வலைக்குல் சிக்குண்டர். அவர்களுக்கே தெரியாது முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்யப்போகின்றது என்று. பின்னர் அவர்களுக்கு தேசியப் படியல் தருவதாக கூறிய வாக்குறுதியும் மறுக்கப்பட்டது. இப்போது லெப்பை ஹாஜியும் நானும் ஒன்றாக கைகோர்த்து செயற்பட்டு வருகின்றோம். ஏனென்று சொன்னால் கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்ககப்ட வேண்டும் என்பதில் கல்குடாவில் உள்ள சகோதரிகள், தாய்மார்கள், இளைஞர்கள், பள்ளிவாயல்கள், மூலைமுடுக்களில் இருக்கும் எல்லோருமே பிரதி நிதித்துவம் பாதுக்காக்கப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றர்கள்.
இந்த சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் காலம் வருக்கின்ற பொழுது கல்குடாவினை மையமாக வைத்து செய்கின்ற சதித்திடங்களை விளங்கிக் கொள்ளதவர்களும், என் மீதுள்ள தனிப்பட்ட குரோதத்துக்காகவும் சிலர் எடுத்துக்கொள்கின்ற முடிவாகவே நான் இதனை பார்க்கின்றேன். இவர்கள் ஏன் றியாலை போன்று கல்குடாவிற்குல் அப்பால் இருந்து ஒருவரை தேடுகின்றார்கள் என்றால்? மிக இளகுவாக இவ்வாறனவர்களை பயண்படுத்தி கல்குடாவின் பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்யலாம் என்பதில் முஸ்லிம் காங்கிரஸ் நம்பிக்கையுடன் இருக்கின்றமையாகும்.
அஹமட் இர்ஸாட்:- கடந்த காலங்களில் கல்குடாவின் முக்கிய பிரச்சனையாக பேசப்பட்டு வந்த தூய குடிநீர் பிரச்சனையானது அன்மையில் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமினால் முதற்கட்டமாக ஆயிரக்கணக்கானோருக்கு தூய குடிநீர் வழங்க்குவதற்கான திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இது உங்களுடைய அரசியலுக்கு ஓர் பின்னடைவாக அமையாதா?
அமீர் அலி:- இத்திட்டமானது முக்கியமாக வரவேற்கக்கூடிய திட்டமாகும். ஏனென்றால் இக்குடிநீர் சம்பந்தமான பிரச்சனையை மக்களுக்கு முதன்முதலில் தெளிவூட்டியவன் நனே. நான் கடந்த தேர்தலில் தோல்வி அடையாமல் இருந்திருப்பேன் என்றால் ஒட்டு மொத்த கல்குடாவுக்குமே இந்த தூய குடிநீரை கொடுத்திருப்பேன். அதற்கு கல்குடவிலே யாரெல்லாம் எதிராக வேலை செய்தார்களோ அவர்கள்தான் பொறுப்பு கூற வேண்டும். கல்குடாவுக்குள் யார் தூய குடிநீரினை கொண்டுவந்தாலும் நான் வரவேற்கின்ற விடயமாகத்தான் அதனை பார்ப்பேன். ஆனால் அது உண்மையான விடயமாக இருக்க வேண்டும். இது முஸ்லிம் காங்கிரசின் தலைவர் எல்லோரும் பேசுவதைப் போன்று கல்குடா மக்களுக்கு தண்ணி காட்டி விட்டுச் செல்லும் விடயமாகவும் அமைந்து விடக்கூடாது.
மற்றையது தூய குடிநீர் திட்டமானது திட்டமிட்டு செய்யப்பட வேண்டிய ஓர் விடயமாகும். அதற்கு நீண்ட காலம் தேவைப்படும். எனக்கு நிச்சயமாக சொல்லமுடியும் போத்தலில் அடைந்த நீரினை கூட கல்குடா கொடுக்க முடியாது. இதனை ஏன் கல்குடாவுக்குல் கொண்டு வருக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். இது கல்குடா சூறா சபையினரால் திட்டமிட்டு அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வீட்டில் அமீர் அலியின் செல்வாக்கை கல்குடாவில் சரிக்க வேண்டும் என்றால் இவ்வாறான குடிநீர் பலகை ஒன்றினை கல்குடாவில் தலைவரின் தலைமையில் நாட்ட வேண்டும் என்ற அடிப்படையிலேதான் அந்த பெயர்பலகையினை நாட்டிவிட்டுச் சென்றுள்ளனர். நான் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு சொல்லிக்கொள்ள விருபுவது மீண்டும் ஒரு முறை கல்குடா மக்களுக்கு தண்ணீர் காட்டி விட்டுச் சென்று விடாதீர்கள். அல்லாஹுக்காக நான் உங்களிடத்தில் கெஞ்சுகின்றேன் தண்ணீரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். நீங்கள் கல்குடாவுக்கு வந்து அரசியல் செய்யல்லம் அல்லது உங்களுடைய கட்சியைப்பற்றி பேசலாம் ஆனால் கல்குடா மக்களுக்கு மிக அவசரமாக அந்த தூய தண்ணீரினை பெறுவதற்கான வாய்ப்பினை பெற்றுக்கொடுங்கள். எனக்கும் அந்த தாகம் இருக்கின்றது அவர்களுக்கும் அந்த தாகம் இருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- உங்களுடன் சேர்த்து கல்குடாவில் மூன்று முறைகள் வேலிகட்டிய அரசியல் மூலமாகத்தான் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றதா அடுத்த முறை தேர்தலில் கல்குடாவில் வேலிகட்டிய அரசியலினை பிரயோகித்து பாராளுமன்ற பிரதிநித்தித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளலாம் என?
அமீர் அலி:- காலத்துக்குக்காலம் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுவது சகஜம். விடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் நிலவிய அரசியலினை தற்போது செய்துவிட முடியாது. இது மக்களால் மக்களுக்கு செய்து கொள்ளப்படுக்கின்ற வேலையாகும். அரசியல் தலைவர்களாகிய நாங்கள் இதைப்பற்றி யோசிப்பதுமில்லை, அலட்டிக் கொள்வதுமில்லை. ஆனால் நீங்கள் கூறியதைப்போன்று கடந்த காலங்களில் அரசியல் சூழ்நிலை சாதகமாக இருந்த காரணத்தினால் அப்பிரதேச மக்களும், அரசியலை நேசிக்கின்ற மக்களும் ஒன்று சேர்ந்து வேலிகட்டிய அரசியல் மூலம் கல்குடா பிரதிநித்தித்துவத்தை பாதுகாத்தார்கள் என்பது பெறுமைப்பட்டுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இருந்தாலும் கல்குடா சமூகம் ஒற்றுமைப்பட்டு விட்டது என்பதும் ஒரு வேலியாகத்தான் நான் பார்க்கின்றேன். அந்த ஓற்றுமை எனும் வேலியும், நேரமும் எதிர்வருகின்ற பொதுத்தேர்தலில் பதில் சொல்லும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.
அஹமட் இர்ஸாட்:- 33000 வாக்குகளை வைத்திருக்கும் கல்குடா மக்களின் ஓற்றுமையினை பலப்படுத்துவதற்காக கல்குடா மக்களுக்கு எதையும் சொல்ல விரும்புக்கின்றீர்களா?
அமீர் அலி:- அதிகாரம் இல்லாத காலகட்டத்திலே மட்டக்களப்பு மாவட்டம் உட்பட, கல்குடா இழந்தது ஏராளமாகும். நாங்கள் வந்து குறுகிய காலத்துக்குள் மட்டக்களப்பு மாவடத்தில் கல்குடா உட்பட தமிழ் மக்களுக்கும் பல அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்துள்ளோம். அந்த வகையில் நான் பிரதி நிதித்துவப்படுத்துக்கின்ற கல்குடா பிரதேசம் செளிப்பாகவும், வறுமை அற்ற பிரதேசமாகவும், இருப்பதனை நான் பார்க்க விரும்புக்கின்றேன். வீடு இல்லாதவர்களுக்கு நிரந்தரமான வீடுகளை கட்டிக்கொடுக்கும் ஓர் திட்டத்தினை அறிமுகப்படுத்த எதிர்காலத்தில் என்னியுள்ளேன். அவற்றை மாவட்டத்தில் இன, மத, மொழி, பேதமின்றி முன்னெடுப்பதே எனது குறிக்கோளாகவுமுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதும் எனது முக்கிய வேலைத்திட்டமாக உள்ளது. அதே போன்று நான் மரணிக்கும் வரை கல்வியைப்பற்றி பேச வேண்டும் என ஆசைப்படுக்கின்றேன். அந்த வகையிலே கல்குடாவின் கல்வி வளர்ச்சியில் நான் மிகவும் அக்கரையுடன் செயற்படுவேன். ஆகவே கல்குடா மக்கள் கடந்த கால அரசியல் பகமைகளை மறந்து எமது பிரதிநிதித்துவத்தை எனதால் நாம் இழக்க நேரிட்டதோ அதை நன்கு உணர்ந்தவர்களகாக ஒற்றுமைப்பட்டு எமது கல்குடாவின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு கல்குடா மக்களை வேண்டிக்கொள்கின்றேன்.
அஹமட் இர்ஸாட்:- தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதி நிதித்துவப்படுத்துக்கின்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நீங்கள் தமிழ் பிரதேசத்துக்கு சொந்தமான காணிகளைப் பிடித்து முஸ்லிம் பிரதேசத்துடன் சட்டரீதியற்ற முறையில் அடைப்பதாக குற்றம் சாட்டுக்கின்றனர் இதில் ஏதும் உண்மை நிலைமகள் உண்டா?
அமீர் அலி:- எப்போதாவது அமைச்சுப்பதவி ஒன்றினை யாராவது மட்டக்களப்பு மாவட்டத்தில் எடுத்துக் கொண்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சேறு பூச தொடங்கிவிடுவார்கள். அது அவர்களின் கைவந்த கலையுமாகும். அந்தவகையில் தனது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் என்மீது சுமத்தி வருக்கின்ற குற்றச்சாட்டாகும். அதனோடு கடந்த கிழமை யோகேஸ்வரன் என்னிடம் வந்து நீங்கள் தமிழ் பிரதேசங்களுக்குச் சென்று அபிவிருத்திகளை செய்வது தனக்குப் பிடிக்கவில்லை என்றும் அவாறு செய்வதனை உடனடியாக தவிர்த்துக்கொள்ளூமாறும் கூறினார். நான் அவரிடம் கூறினேன் மாவட்டத்துக்கு மாத்திரமல்ல முழு இலங்கைக்கும் நான் அமைச்சராக உள்ளவன். ஆகையால் நான் தமிழ் மகளுக்குறிய பங்கினை நான் அவர்களுக்கு கொடுத்தே ஆக வேண்டும் எனக் கூறினேன். அதில் எங்கள் இருவருக்கும் வாய்த்தாக்கம் ஏற்பட்டது. அதற்க்குப்பிற்பாடு என்னிடம் சொன்னார் நீங்கள் காணிபிடிட்து முஸ்லிம்களுக்கு கொடுக்கின்றீர்கள் எனக்கூறினார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களிலும் அவர் எனக்கெதிரன கருத்துக்களை தெரிவித்து வருக்கின்றார். இது இன்றல்ல நேற்றல்ல மிக நீண்ட காலமாக இருந்துவருக்கின்ற பிரச்சனையாகும். முஸ்லிம் எம்பீக்கள் தமிழ் பிரதேசங்களுகுள் சென்று அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் போது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களை உசுப்பேத்துவதற்காக அன்று தொடக்கம் பாவித்து வருக்கின்ற அரசியல் ஆயுதமாகும். ஆகவே இதனை தமிழ் மக்களும் நன்கறிந்தவர்களாகவே இருக்கின்றனர்.

