Saturday, 23 May 2015

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் முயற்சி


அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் என்னை வீழ்த்தின – மஹிந்த - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-


அமெரிக்காவும் ஐரோப்பியமுமெ தம்மை வீழ்த்தியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்தே கடந்த ஜனாதிபதி தேர்தலில் இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக அடிக்கடி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா குற்றம் சாட்டி வந்தாகவும், புதிய அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி மாற்றத்தை மட்டுமே இந்த நாடுகள் விரும்பியதாகவும் ஆட்சி மாற்றம் அந்த தரப்பை மகிழ்ச்சியடையச் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பணி நீக்கப்பட்ட விதம் ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் மேற் கொள்ளப்பட்ட போது மேற்குலக நாடுகள் அமைதி பேணி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தமது அரசாங்கம் ஏதேனும் குற்றம் செய்தால் அதனை சுட்டிக் காட்டும் மேற்குலக நாடுகள், புதிய அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக் காட்டுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை பழிவாங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமக்கும், தமது குடும்ப உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் முன்னைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சில சட்டவிரோத செயற்பாடுகளின் பின்னர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் முயற்சியில் புலம்பெயர் சமூகம் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Thanks Global Tamil News
Loading...