Tuesday, 19 May 2015

ஹெலிகாப்டர் விபத்து - இந்தோனேஷியத் தூதரும் பலி

வடக்கு பாகிஸ்தானில், பதினோறு நாட்களுக்கு முன்னர் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்த பாகிஸ்தானுக்கான இந்தோனேஷிய தூதுவர் தற்போது இறந்துவிட்டார்.

விழுந்த ஹெலிகாப்டர்

விழுந்த ஹெலிகாப்டர்

இந்தோனேஷியத் தூதர் புர்ஹான் முஹமத் வெளிநாட்டு இராஜதந்திர பிரதிநிதி குழு ஒன்றுடன் இராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தப்போது, அந்த ஹெலிகாப்டர் ஒரு பள்ளி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மோசமான தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட முஹமது, சிங்கபூரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்தில் முஹமதுவின் மனைவி இறந்துபோனார். மேலும் அந்த விபத்தில் நார்வே மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் தூதுவர்களும், மலேசிய நாட்டு தூதுவரின் மனைவி மற்றும் பாகிஸ்தானிய குழுவினர் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த ஹெலிகாப்டரை தாம் சுட்டு விழ்த்தியதாக தீவிரவாதிகள் உரிமை கோரினாலும், ஒரு தொழிற்நுட்ப கோளாரால் இந்த விபத்து ஏற்பட்டதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
Loading...