உங்களது விளக்கம், ஒரே வரியில் இல்லாமல் வரிக்கு வரி இருத்தல் அவசியம்
வேரில்லா
கொடியின்
காம்பில்லா
மலரின்
இதழை
கைபடாது
பறித்திடவா
எனக் கேட்க
கனம் இல்லா
தலைக்கேட்டு
தனமில்லா
தனவானும் இணங்க
நீரில்லா
குளத்தின்
நடுவே
அனல்காற்றை
முன்னிறுத்தி
வாய் இல்லாத
ஊமைகள் வாழ்த்த
கண் இல்லாத
குருடர்கள் பார்க்க
செவி கேளா
செவிடர்கள் கேட்க
அறுபடா
நூலெடுத்து
முடிகள்
மூன்று
சூடும் வேளையில்
பறித்திடுவாய்
என்றே பதில் வந்தது.
=>=>=>=> எழுதியவர் ராசகவி ரா சத்தியமூர்த்தி
