புதிய தேர்தல் முறைமையினால் சிறு கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை என கபே தெரிவித்துள்ளது. புதிய தேர்தல் முறைமை நன்மையை ஏற்படுத்தும் என கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் முறைமையினால் சிறு கட்சிகள் தங்களது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2004 மற்றும் 2010ம் ஆண்டு தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த போது சிறு கட்சிகள் புதிய முறைமையில் போட்டியிட்டாலும் அதேயளவு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும் என தெரியந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் கணக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

