காரைதீவு பிரதேச சபையில் அண்மையில் இடம்பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அ .பாயிஸ் அவர்களுக்கும் பிரதேச சபை உத்தியோகத்தருக்குமிடையில் இடம்பெற்ற கைகலப்பின் பிரதி பிம்பமாக பிரதேச கல்விமான்களும்,சமுக தலைவர்களும் குறித்த பிரதேச சபை உறுப்பினர் மீது அதிருப்தியை வெளியிட்டனர்.கடந்த 2 சபைகளிலும் தலா 1 வீதம் முஸ்லிம் காங்கிரசில் முஸ்லிம் மக்கள் அனுப்பியிருந்தும் இந்த சபையில் அங்கம் வகித்த சகோதரர் பாயிஸ் அவர்கள் அதிக சபை அமர்கவுகளில் கலந்து கொண்டு தமக்கு வாக்களித்த மக்களுக்கு ஆக்கபூர்வமான எந்த சேவையையும் செய்ய முன்வரவில்லை என்றும் தான்தோன்றி தனமாக இயங்கிவந்த இந்த உறுப்பினர் சபை நாகரிகங்கள் தெரியாத ஒருவராக இருந்து வந்தது கவலை தரும் ஒன்றாக உள்ளது என்றும் இப்படியானவர்களை எதிர்வரும் காலங்களில் மக்கள் புறகணிக்க வேண்டும் என்றும் காரைதீவு பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

