முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீழ் சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் தனக்கு எதிராக அழுத்தம் பிரயோகிக்கப்பட்டமை தொடர்பில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிபடுத்தியுள்ளார்.
அலரி மாளிகையில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் சுகாதார அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் ஏதேனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது எனக்கு அலரி மாளிகையில் இருந்து தொலைபேசி அழைப்பு வரும் அதன் போது என்னிடம் கேட்பார்கள் ரத்தின பிரிய இன்று வந்தார்களா என்று ஆம் என்று நான் கூறுவேன்.
ஏன் அவரை இன்று வருவதற்கு சம்மதம் தெரிவித்தீர்கள் அவர் தொழிற்சங்க தலைவர் என்பதனாலே அவரது வருகைக்கு சம்மதம் தெரிவித்தேன் அனைத்து தொழிற்சங்க தலைவர்களையும் சம்மதிக்க நான் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவேன்.
அதன் போது அவர் அரசாங்கத்திற்கு எதிரானவர் என்று உங்களுக்கு தெரியாதா என்று கேட்பார்கள் தெரியும் என்று பதிலளித்தால்,
தெரியும் என்றால் எதற்கு சந்திப்பதற்கு சம்மதம் தெரிவித்தீர்கள் என்று கேட்டால் வழங்க வேண்டியது அவசியம் என்று கூறுவேன்.
கடந்த 05 வருடங்களும் என்னை இவ்வாறே கட்டுபடுத்தி வைத்திருந்தார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆதங்கத்தை இன்று வெளிப்படுத்தியிருந்தார்.
