முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்றவியல் பிரிவிற்கு வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக சென்றிருந்த போது ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.
சதொச நிறுவனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐந்து மில்லியன் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.
