என்னென்ன தேவை?
வாழைக்காய் - ஒன்று
பாசிபருப்பு - கால் கப்
வெங்காயம் - ஒன்று
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 5
கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம், எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, கொத்தமல்லி - சிறிது
எப்படிச் செய்வது ?
வாழைக்காயை துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வெங்காயம், இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் வாழைக்காய் சேர்த்து பிசுபிசுப்பு போகும் வரை வதக்கவும். பருப்பு, உப்பு, மஞ்சள் தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். வேண்டுமானால் தேங்காய் துருவல் சேர்க்கலாம். சுவையான வாழைக்காய் பருப்பு பொரியல் தயார்.
