Friday, 8 May 2015

சிறு­பான்மை கட்­சி­களின் கூட்டம் இன்று : தேர்தல் முறை குறித்த நிலைப்பாடு அறிவிக்கப்படும்

சிறு கட்­சி­களின் பேரவை இன்று கொழும்பில் கூடி தேர்தல் முறை மாற்­றத்தை கோரும் 20ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் தொடர்பான தமது நிலைப்­பாட்டை எடுக்­க­வுள்­ள­தாக ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும் தேசிய நிறை­வேற்று சபை உறுப்­பி­னரு­மான மனோ கணேசன் தெரி­வித்தார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறி­யுள்­ள­தா­வது,


கடந்த 29ஆம் திகதி ஜனா­தி­ப­தியால் அமைச்­ச­ர­வையில் சமர்­பிக்­கப்­பட்ட 20 ஆவது திருத்த யோச­னைகள் தொடர்பில் சிறு கட்சி தலை­வர்­களால் பரி­சீ­லிக்­கப்­பட்டு  இறுதி முடிவு எடுக்­கப்­படும். சிறு கட்­சி­களின் நட­வ­டிக்கை குழு ஏற்­க­னவே பல­முறை கூடி இந்த விவ­காரம் தொடர்­பான கொள்கை ஆவணம் ஒன்றை தயா­ரித்­துள்­ளது. நேற்று (நேற்று முன்தினம்) அலரி மாளி­கையில் நடை­பெற்ற பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்­பிலும், இன்று காலை (நேற்று) தேர்தல் ஆணை­யா­ள­ருடன் நடை­பெற்ற சந்­திப்­பிலும் இவை தொடர்­பாக ஆரா­யப்­பட்­டன.

இந்­நி­லையில் அனைத்து  சிறு­பான்மை மற்றும் சிறு கட்­சி­களின் பிர­தி­நி­திகள் இன்று பிற்­பகல் 3 மணிக்கு பத்­த­ர­முல்லை வோடர்ஸ் எட்ஜ் விடு­தியில் கூடி, நட­வ­டிக்கை குழு தயா­ரித்­துள்ள ஆவ­ணத்தை ஆராய்ந்து முடிவு எடுக்க உள்­ளனர். இக்­கூட்டம் தொடர்பான அழைப்புகள் அனைத்து சிறு கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்

Loading...