Tuesday, 19 May 2015

கவிதை -அவமானம்

                                                            
                                                      கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

யாரோ செய்த தவறு 
மண்ணில் -குழந்தை 
பிறக்கப்படுகின்றது ,

உள்ளத்து உணர்வுகளை 
அவமானமாக்கி விட்டு ..!
அசிங்கப்படுத்தி விட்டு...!!

கருவறைக்குள் உருவாக்கப்பட்டவர்களின் 
"பிறப்புச் சான்றிதழ் "எழுதும் 
அசிங்கமான நடத்தைகளின் 
மொழி பெயர்ப்புக்கள் -இன்று

உயிரின் -
முதலெழுத்துக்களையறியாமல் 
வசைபாடல்கள் இசையாகின்றன ..!

எத்தனை எத்தனையோ பெண்கள் 
தாய்மை வரமில்லாமல் 
மலடி பட்டதை பெற்றுக்கொண்டிருக்க ....
வேதனைச் சுமைகளை 
தாங்கிக் கொண்டிருக்க ...,
இங்கே -
குப்பை மடுவிலும் ...
சாக்கடையோரங்களிலும் .....
கழிவறைகளிலும் ......
சிசுக்களின் குரலோசை 
மனங்களை புதைக்கின்றன

வேதனைகளை 
கண்ணீராய் வடிக்கின்றன 
மனிதாபிமானத்தை 
இழந்து விடுகின்றன ...!

தலை தூக்கிவாழ்வதற்கு 
பெற்றவர்களின் -
தலையெழுத்துத் தெரியாமல் (புரியாமல் )
துடித்தழும் செல்வங்கள் -
யாருமற்ற அனாதைகள் 
ஆதரவற்ற சிறுவர்கள் சிறுமிகழுக்கு 
பராமரிப்பு நிலைங்கள 
வாழ்க்கைக்கு முகவரி காட்டும் ...!

முகாம்களில் 
உரிமையின்றிக் கிடக்கும் -இந்த 
ஆதரவற்ற குழந்தைகள் 
தமக்கு 
உயிர் கொடுத்த 
உத்தமிகளின் 
முகவரி தேடி 
வேதனைச் சுமைகளை 
கண்ணீரில் கரைகின்றன ...!

தாங்கும் தூன்(ங்)களின்றி 
வாழும் இந்த 
அப்பாவி ஜீவன்கள் 
பார்க்கும் இடமெல்லாம் 
பாசத்தினை-
தேடிக் கொண்டிருக்கும்

தாயின் தாலாட்டுக்களை 
கேட்டு உறங்காத இந்த 
சின்னக் குழந்தைகள் -
தேடித் தவிப்பது 
தாய்ப்பாலையல்ல:
எவரோ ஒருவரின் 
இச்சை பசியை தீர்க்க 
தன்னை தானம் செய்த தாய்யின் 
உள்ளத்து உணர்வுகளை 
கண்ணீரின் துளிகளை

பெற்ற உள்ளங்களே 
பேணிக் பாதுகாக்கவிட்டதினால் 
இங்கே ஆறு குளங்களும் 
வற்றிக் கிடக்கின்றன 
மழை பொழியாதனால் அல்ல ...
குழந்தைகளின் வேதனை வெப்பங்களினால்

பயங்கரவாதச் சட்டங்களுக்கு 
ஆள் அடையாள அட்டை 
பெற வேண்டிய 
இந்த சான்றிதழில்லா 
பிறவிகளுக்கு இன்று 
மன நிம்மதிய்ற்ற 
தர்ம சங்கடங்கள் ...!

உண்மையில் -இவர்கள் 
அழுக்கடைந்தஉள்ளங்களின் 
அவமானச் சின்னங்கள்

ஏமாற்றத்தின் அசைவுகளில் 
வார்தைக்களின் நம்பிக்கைகளில் 
அடிமையாகிப் போன 
அக்கினியின் சுடர்கள் 
சோகங்களை சுமக்கும் 
நிம்மதியற்ற உள்ளங்கள் 
ஹலால் குட்டிகளைப் பெறாத 
ஹராம் குட்டிகள்

வெள்ளை உடைகளை 
அணிந்திருந்தாலும் 
அழுக்கான ஆத்மாக்களை 
சுமந்து கொண்டிடுக்கும் 
வெறி பிடித்த நாய்களை கண்டு 
இச்சைக்கு ஆளானவர்கள் 
சிந்தித்து வாழட்டும்

யாரோ செய்த தவறு 
மண்ணில் -குழந்தை 
பிறக்கப்படுகின்றது ,
உள்ளத்து உணர்வுகளை 
அவமானம்ஆக்கி விட்டு !

Image result for babies thrown images

********கலைமகள் ஹிதாயா ரிஸ்வி********



Loading...