
அன்புமுஹையதீன் ரோசன்
நீ நினைப்பது போல் போல்
பெரிய கஷ்டம் ஒன்றுமில்லை
இல்லாமை மட்டும்தான்
உன் இருப்பின் அவசியத்தை உணர்த்தும்
குளிர் ஊறி திறையும்
நிலவொளுகும் இரவுகள் குறைவு
விழித்திருந்து சொல்ல கதைகளுமில்லை
எல்லாம் பொய்கள்
நிலவு ,மேகம் ,வானவில்
எழுதி தருவதாய்
உறவுகளை விலத்தி
காற்று வெளியில் பறவையாய் பறப்பதும்
நீ இல்லையேல் உயிரை
போக்கி விடுவேன் என்றதும்தான்
உன் உறவிக்காக ஒரு முடியை
இழந்திடல் சம்மதமில்லை
இன்னும் நேசித்தலில் பொய் இல்லை .
ஒரு பூனை குட்டியை போல்
உனக்குள் முயங்கிக் கிடந்ததை
எப்படி இயலும் மறக்க ......
ரோசன்
