
எமது உடன்பிறப்புக்களான பர்மிய முஸ்லிம்கள் கடந்த பல வருடங்களாகவே சொல்லொனாத் துயரத்துக்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். அங்கு இடம்பெற்று வரும், உள்ளத்தைப் பிழியும் நிகழ்வுகளைக் காணும் போது, மனித நேயம் கொண்ட எந்த மனிதனுக்கும் கண்ணில் கண்ணீர் கசியாமல் இருக்காது.
எமக்கிருக்கும் இந்த சகோதரத்துவ உணர்வு முஸ்லிம் நாடுகளின் தலைவர்களுக்கு ஏன் இருப்பதில்லை...? என்று வியப்பாக இருக்கிறது.
இஸ்லாத்தின் எதிரிகளின் நோக்கம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பது தான் என்பதில் வியப்பேதுமில்லை. அவர்களைக் கடிந்து கொள்வதால் பயனேதும் ஏற்படப் போவதுமில்லை.
எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவது நல்லது தான். ஆயினும், இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள், அரபு முஸ்லிம் நாட்டுத் தலைவர்களுக்கு நெருக்குதல் கொடுக்கும் வகையில், அந்தந்த நாடுகளிலும் அந்நாடுகளின் தூதுவராலயங்களுக்கு முன்னாலும் இடம்பெற்றால் அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும்.
செயலற்ற து'ஆக்களும், வெறும் ஒப்பாரிகளும் எதுவும் செய்துவிடப் போவதில்லை. இதனைத் தடுக்கக் கூடிய சக்தியை அல்லாஹ் எமக்கு அளித்துள்ளான். அதனைப் பயன்படுத்த வேண்டும்.
"பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது?" குர்'ஆன் 4/75.................... என்று அல்லாஹ் எம்மைப் பார்த்து கேள்வி எழுப்புகிறான்.
.jpg)
