ஜோன் கெரியை சந்திக்க அனுமதியளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தையும் தூதரகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் இலங்கை விஜயம் உறுதியானது முதல் பல தடவைகள் சந்திப்பு ஒன்றுக்கு சந்தர்ப்பம் தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கைக்கு அமெரிக்கத் தூதரகம் எவ்வித பதிலையும் அளிக்காது மௌனம் காத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
