
கடந்த சில காலங்களாக வர்மா மண்ணில் எமது உறவுகளின் பொருளாதாரத்தை சூறையாடி அவர்களை அந்த மண்ணை விட்டு விரட்டியடிக்கும் செயலில் சில காவியுடை தரித்த பயங்கர வாதிகள் முனைப்புடன் செயற்பட்டு வருவதை முகபுத்தகத்தை தவிர எந்த ஊடகமும் செய்தி வெளியிட முன்வராது இருப்பது பாரிய கவலையை தோற்றுவித்துள்ளது.
எப்படியாக இருந்தாலும் எமது தேசத்தில் உள்ள சகல மக்களும் பிரதேச, கட்சி பேதங்கள் துறந்து இந்த பிரச்சினைக்கு எதிராக தமது எதிர்ப்பை வெளியிட முன்வர வேண்டும்.
அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த அசின் விராது எனும் புத்ததுறவியின் தலைமையில் இயங்கிவரும் இந்த பயங்கரவாத அமைப்புக்கு எதிராக சகல மக்கள் பிரதிநிதிகளும் பாராளுமன்றத்திலும்,மாகாண சபைகளிலும்,தமது குரல்களை உயர்த்தி தமது கண்டனங்களை வெளியிட முன்வர வேண்டும் என சகல மனித நேயமுள்ள மக்கள் பிரதிநிதிகளையும் பாதிக்க படும் மக்களின் சகோதரனாக அழைப்புவிடுக்கிறேன். அத்துடன் இலங்கை உள்ள சகல தன்னார்வு தொண்டுநிருவனங்களும் தமது எதிர்ப்பை வெளியிட்டு தமது உறவுகளை காத்திட முன்வருமாறும் அழைக்கிறேன். நாம் இந்த பிரச்சினையை கடல் கடந்து வாழும் மக்களின் பிரச்சினையாக கொண்டு அமைதிகாத்து வருவது நமக்கே பிற்காலத்தில் கெடுதலாக அமையலாம் என எச்சரிக்க விரும்புகிறேன். அசின்விராதின் மியன்மாரில் இயங்கிவரும் அந்த தீவிரவாத அமைப்பிற்கும் இலங்கையில் இயங்கிவரும் பொது பலே சேனா அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது அண்மைய அசின் விராதுவின் இலங்கை விஜயமும் அவர் இலங்கையில் ஆற்றிய உறையும் தெளிவுபடுத்தி உள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் அண்மை காலங்களில் அனுபவித்து வரும் துயர செயல்களுக்கு திரைமறைவில் ஆதரவாக செயற்படும் இந்த அமைப்பினரால் எதிர்வரும் காலங்களில் நாமும் பிரச்சினைகளை முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை மனதில் கொண்டு இந்த விஷ கிருமிகளை அழிக்கும் துய போராட்டத்தை அனைவரும் இரண்டர கலந்து செய்ய முன்வருமாறு எனது சகல இலங்கை சகோதர சகோதரிகளுக்கும் அழைப்பு விடுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஊடக நண்பர்களும் இந்த முஸ்லிம் சமுகம் எதிர்நோக்கும் பிரச்சினையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் எவ்வித காழ்புணர்ச்சிகளுமின்றி தொடர்ந்தும் மேற்கொள்ள முன்வருமாறும் அழைப்பு விடுக்கிறோம் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சியின் சார்பில் தேசிய கொள்கைபரப்பு செயலாளரும் அல் -மீசான் பௌண்டசன் தலைவருமான அல் -ஹாஜ் ஹுதா உமர் தமது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
