Tuesday, 5 May 2015

கம்பன் வீட்டுத் தறிகள்


Maruthanila Niyas
 மருதநிலா நியாஸ்


கன நாளைக்கு பொறகு
கரவாகு வட்ட மார்கட்டுக்குள்ள
வெட்டு மீனு வாங்க வேக்கோடப் போனன்
கம்பன் வீட்டுத் தறியும் அங்க கவிபாடுது.......!
பச்சையும் மஞ்சலும் கலந்த 
ஐஸ் பழம் ஒண்ட பையன் ஒருத்தன்
சூப்புறதக் கண்டு


ஒரு மீன் யாவாரி சொல்றான்
அங்கபாருடா.....
இப்பவாற அந்தப்பழத்த
காத்துலயே கரஞ்சி 
பொடியண்ட வாய் கையெல்லாம் பழுதாகி
வெள்ளச் சேட்டுலயும் ஒழுகி
காவி அடிக்கிறத...........!
மத்த யாவாரி சொல்றான்
கூல் இல்லாத 
இந்த நீலப் பொட்டிக்குள்ள வெச்சா
இப்புடித்தான் கரையிற........
பழய பச்சப் பொட்டி இப்புடில்ல 
பழங் கரயாம கெட்டியா வெச்சிரிக்கும்
புள்ளயள்ற உடுப்புலயும்
காவி படியிறல்ல.........!
நான் சொன்னன்
எனக்கு சின்ன வயசில
இந்த சந்தைக்குள்ள
குண்டு வெடிக்கிறதுக்கு முன்ன
மொட்ட அப்பா ஒருவர்
கொண்டுவாற அந்தப்பழம்
கெட்டியா கரையிறதே இல்ல
நல்லா கடிச்சி தின்னலாம்
காவியும் வெள்ள உடுப்ப நெருங்கிறல்ல....!
அப்ப அவருக்கு நிறய யாபாரம் போற
இப்பய யாவாரிகளுக்கு
புள்ளயளின்ட 
வெள்ள உடுப்பு பத்தி கவலயே இல்ல
கரஞ்ச ஐசென்டான வித்து
தங்கட பக்கட்டு நெறஞ்சாச் செரிதாண்டு
நெனக்கிறாங்க......!
மத்த யாவாரி 
கத்திய தீட்டிக்கிட்டே சொல்றான்
பச்சப் பொட்டி நீலப்பொட்டியெல்லாம்
பழம் கரையக் காரணமில்ல தம்பி.......
பழம் செய்பவன் 
கலவய ஒழுங்காப்போட்டா
எந்தப் பொட்டிக்குள்ள வச்சாலும் கரையமாட்டா
கெட்டியாவும் இருக்கும்
நல்லா யாபாரமும் போகும்...........!.
அவன் சொல்றதும் 
சரி போலதான் இருக்கு 
என நெனச்சி மீன் வேக்கோட 
வீட்டுக்கு வந்திட்டன்
நமக் கெதுக்கு வீண் வம்பு........... !!
------------------------------ மருதநிலா நியாஸ்
Loading...