உத்தேச தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் கடந்த பதினோராம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றத குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அனைத்து கட்சி பிறமுகர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் சிறுபான்மை கட்சிகளின் கட்சி முக்கியஸ்தர்களும் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் விஜெதாச ராஜக்ஷ சுதந்திர கட்சி சார்பாக நிமல் சிறிபால , மஹிந்த யாபா ,சுசில் ஆகிய முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
பத்தொன்பதாவது சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் உத்தேச தேர்தல் சீர்திருத்தம் சுதந்திர கட்சியிக்கு சாதகமாக அமையும் என்பதால் சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் மிக தீவிரம் கட்டிவரும் நிலையில் அன்றைய கூட்டத்தில் சிறுபான்மை கட்சிகள் மற்றும் சுதந்திர கட்சி சார்பாக காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன .
சுதந்திர கட்சி யினால் முன்மொழியப்பட்ட உத்தேச தேர்தல் முறை தொடர்பாக முன்மொழிவு இடம்பெற்ற பின்னர் கிழக்கு தவிர்ந்த பகுதிகளில் முஸ்லிம்களின் பாராளுமன்றம் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும் என கட்சி பொது செயலாளர் வை எல் எஸ் ஹமீத் வாதிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் வை எல் எஸ் ஹமீத் மற்றும் சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் மிக காரசாரமாக விவாதித்து கொண்டுள்ளனர்.
முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் இடம்பெற்ற இந்த கடுமையான விவாதத்திலும் மு கா தேசிய தலைவர் அமைச்சர் ஹக்கீம் தொடக்கம் முதல் இறுதிவரை வாய் திறக்காமல் மவுனம் காத்து அனைவரையும் அதிர்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஜனாதிபதி பிரதமர் தலைமையில் முஸ்லிம் தமிழ் கட்சி பிரமுகர்கர்கள் பலர் கலந்துகொண்ட முஸ்லிம்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான மிக முக்கியமான அந்த கலந்துரையாடலில் அமைச்சர் ஹக்கீம் மவுனாமாக இருந்தது அரசியல் வட்டாரங்களில் ஆச்சர்யாமாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய தமிழ் அரசியல் புள்ளி தனது கடுமையான கவலையை சிலரிடம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..
போராளிகளிடத்தில் இது தொடர்பாக கேட்டால் தலைவர் அன்றைய தினம் மவுன விரதம் இருந்திருப்பார் என்று பதில் தருவார்களோ என்னவோ…!

