Saturday, 23 May 2015

கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் கற்பிக்கும் ஆசிரியர்கள்


Image result for EASTERN PROVINCIAL COUNCIL

கிழக்கு மாகாணத்திலிருந்து வெளி மாகாணத்து பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களை அவர்களின் சொந்த மாவட்டப் பாடசாலைகளில் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருப்பதால் விரும்பியவர்கள் விபரங்களை அனுப்புமாறு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் கற்பிக்கும் ஏராளமான ஆசிரியர்கள் தங்களின் பயணம் மற்றும் குடும்பக் கஷ்டங்களைக் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதிடம் எடுத்துக் கூறியதைத் தொடர்ந்து மேற்குறித்த நடவடிக்கையினை மேற்கொள்ள தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே கிழக்கு மாகாணத்துக்கு வெளியில் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் கடமையாற்றும் மற்றும் தங்களையும் தங்கள் மாகாணத்திலேயே நியமியுங்கள் என்று கூறும் அனைவரும் தங்களது பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தற்பொழுது கற்பிக்கும் பாடசாலை போன்ற விபரங்களை east.complaine@gmail.com என்னும் ஈமெயிலுக்கு அனுப்பிவைக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்துல்சலாம் யாசீம்-

Thanks Tamil CNN
Loading...