Sunday, 24 May 2015

லண்டனில் விசா இல்லை உண்ண உணவு இல்லை (Video)



இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அகதியாக லண்டன் சென்ற ஒரு பெண் தனது பரிதாபகரமான நிலையினை சர்வதேச ஊடகம் ஒன்றிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

குறித்த இந்தப் பெண்ணுக்கு லண்டனில் விசா இல்லை. அத்தோடு மறைந்து வாழ்ந்து வருகிறார். உண்ண உணவு இல்லை. கையில் 10 பவுன்ஸ் காசும் இல்லை.

ஆனால் லண்டனில் மட்டும் 4 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். இவருக்கு சாப்பாடு கொடுப்பது என்னவோ ஆச்வே முருகன் கோவில். யாரவது ஒரு தமிழரின் வீட்டு திண்ணையில், அல்லது கேராஜில் படுத்து உறங்குகிறார். ஆனால் எங்களை பாருங்கள்.

சும்மா ஹெலிகொப்டரை வாடகைக்கு அமர்த்தி மகளின் சாமத்திய வீட்டைச் செய்கிறோம். 50,000 பவுன்சுகளை செலவு செய்து மகனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். அதே லண்டனில் எங்கோ ஒரு தெரு மூலையில் எம் தமிழ் அம்மாக்கள் படும் பாட்டைப் பார்த்தீர்களா ?

தமிழ் ஊடகங்களுக்கு அவர் அழு குரல் கேட்கவில்லை. ஆனால் ஆங்கில ஊடகங்களுக்கு மட்டும் ஏன் இந்த அக்கறை என்று அங்கலாய்க்கத் தோன்றுகிறது.

இவருக்கு உதவிசெய்ய நினைப்பவர்கள் அவரை தொடர்பு கொள்ளுங்கள். ஒரு வேளையாவது அவர் உண்டு நல்ல இடத்தில் உறங்க அவருக்கு உதவி புரியுங்கள். உங்கள் வருங்கால சந்ததிகள் நன்றாக வாழும்.



Thanks CNN Tamil
Loading...