கனடா நாட்டில் அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய குடியமர்வு சட்டத்தின் அடிப்படையில் அந்நாட்டில் குடியேறியுள்ள சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் இலங்கை குடிமக்களை நாட்டை விட்டு வெளியேற்றும் அபாயம் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
கனடா அரசாங்கத்தால் புதிய குடியமர்வு சட்டம் கொண்டுவரப்பட்டு அந்நாட்டு பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது.
இந்த புதிய சட்டத்தின் அடிப்படையில், முதல் நிலை குடியேற்ற பிரிவினரான கனடாவில் பிறந்த குடிமக்களுக்கு அதிக உரிமைகளை அளிக்கும் விதத்தில் இருக்கிறது.
ஆனால், இரண்டாம் நிலை குடியேற்ற பிரிவினர்களான அந்நாட்டில் குடியேறியுள்ள வெளிநாட்டினர்களுக்கு போதிய உரிமைகளை அளிக்கப்படவில்லை என்றும், அவர்களின் குடியுரிமையை எந்த நேரத்திலும் பறிக்கப்படும் அல்லது அவர்களை நாட்டை விட்டு தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினற் ஒருவர் கூறுகையில், அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய குடியமர்வு சட்டமானது இலங்கையை சேர்ந்த சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் குடிமக்களின் கனடா குடியுரிமையை பறிக்கும் விதத்தில் இருக்கிறது என்றார்.
இலங்கை தமிழர்களான நாங்கள் கனடா அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களுக்கு மரியாதை அளித்து வரும்போதும், தற்போதைய இந்த புதிய சட்டம் கனடாவில் குடியுரிமையை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் இலங்கை தமிழர்களையும் வெகுவாக பாதிக்கும் என்றார்.
பாராளுமன்றத்தின் C-24 என்ற சட்டத்தின் கீழ் கனடாவில் பிறந்து வளர்ந்த வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்கள் கூட இரண்டாம் நிலை குடியமர்வு பிரிவின் கீழ் வருவதால், அவர்களின் கனடா குடியுரிமையும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கனடாவில் பிறந்த அந்நாட்டு குடிமக்களை பாதுகாக்கவே இந்த புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ளதாக அரசாங்கம் கூறினாலும், கனடாவில் பிறந்த வெளிநாட்டு பிரஜ்ஜைகள் மற்றும் அவர்களின் பிள்ளைகளுக்கு குடியுரிமையை மறுக்கப்படுவதை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.