Thursday, 4 June 2015

நெடுஞ்சாலைகள் அமைச்சில் ரூ 28 பில்லியன் கையாடல் நடந்தது என்ற பிரதமரின் குற்றச்சாட்டுக்குப் பதில்.

- மஹிந்த ராஜபக்ஷ
mahinda sign


 நான் நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற தகைமையைப் பயன்படுத்தி ரூ 55 பில்லியன்களை 28 நெடுஞ்சாலைகள் அமைப்புத் திட்டங்களுக்கு என்று காரணங்காட்டித் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து கடன் வாங்கினேன் என்றும், ஆனால் அந்த நிதியிலிருந்து ரூ 28 பில்லியனகளைப் பிற தேவைகளான ஹெலிகாப்டர் சவாரிகள் மற்றும் மக்களுக்கு இலவச உணவு வழங்கல் போன்றவைக்குப் பயன் படுத்தப் பட்டுவிட்டது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், நேற்றுக் கூறப்பட்டது. இது எனக்கு எதிராக மடை திறந்துவிட்ட அவதூறுப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளதோடு உள்கட்டுமான வளர்ச்சிப் பணிகளில் எனது அரசாங்கத்தினது உறுதியான சாதனைகளைச் சிறுமைப்படுத்தும் ஒரு முயற்சியுமாகுமென்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலிறுத்தார். வீதி அபிவிருத்தி அதிகாரசபை 28 நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக உண்மையில் ரூ 55 பில்லியனைத் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து நீண்ட காலக் கடனாகப் பெறவில்லை.
ரூ 55 பில்லியன் நீண்ட கால கடனின் ஒரு அங்கமாகப் பிரதம மந்திரி குறிப்பிட்டுள்ள இந்த ரூ 28 பில்லியன் இருக்கவில்லை. இது வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் தற்பொழுது நடைபெற்று வரும் வௌ;வேறு அபிவிருத்தித் திட்டங்களின் பல்வேறு கொடுப்பனவுகளுக்காகத் தேசிய சேமிப்பு வங்கியோடு பேரம்பேசிப் பெறப்பட்ட ஒரு குறுகியகாலக் கடனாகும். திறைசேரி உண்மையில,; தேசிய சேமிப்பு வங்கிக்கு முறைப்படி நாணயம் தவறா ஆறுதல் கடிதங்கள்' அனுப்பி வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இந்தக் குறுகிய காலக் கடன்களை அனுமதிக்கும்படியும் அது பின்னர் 2015 வரவு செலவு திட்டத்தின்; மூலம் இறுக்கப்படும் என்றும் கேட்டுக் கொண்டது. அனைத்து நெடுங்சாலைத் திட்டங்களும் வீதி அபிவிருத்தி அதிகாரசபைப் பொறியியலாளர்கள் மற்றும் ஒப்பந்த வாரியங்கள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டு கொடுப்பனவுகள் வேலை அடிப்படைச் சான்றிதழ்களின் அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களுக்கான பாராளுமன்றக்குழு வீதி அபிவிருத்தி அதிகாரசபையாற் செய்யப்பட்ட வேலைகளைத் தேசிய சேமிப்பு வங்கி  யின் கடன் வசதிகள் அடிப்படையில் ஒப்புநோக்கிச் சரிபார்க்க முடியும்.
    ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற வெளிநாட்டு நன்கொடையாளர்களின் அனுசரணையின்  மூலம் பெறப்பட்ட நிதி திட்டங்களில் தேவைப்படும் 'உள்வாரித்' தேவைகளைப் பூர்த்தி செய்யவே தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து எடுத்த ரூ 28 பில்லியன் குறுகிய காலக் கடனின் பெரும்பாலான பகுதி பயன்படுத்தப்பட்டன.
 அவற்றில் சில பராமரிப்புக்களுக்காகவும் ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலைகளைப் பழுதுபார்க்கவும் பயன்படுத்தப்பட்டன. எந்தவொரு நிகழ்விலும் அனைத்து நிதிகளும் வீதி அபிவிருத்திக்;கே செலவிடப்பட்டன.
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட மற்றய ரூ 55 பில்லியன், நீண்ட கால கடனின் கீழ் வருவன. இந்த திட்டங்கள் சில இன்னும் முற்றுப் பெறாது தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முழுப் பணத்தையும் இன்னும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனது கடைசி வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்த தேசிய சேமிப்பு வங்கிக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய முழுக் குறுகிய கால கடன்களான ரூ 28 பில்லியனானது பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றது என்பதை நான் கூறு விரும்புகின்றேன்.   தற்போதைய அரசாங்கம் இந்த ரூ 28 பில்லியன் பற்றிய பல கதைகளை இட்டுக்கட்டும் காரணம் என்னவெனில் வெளிபடையாகச் சொல்வதென்றால் அவர்;கள் என் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடு செய்த பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி விட்டு, இப்போது அந்தப் பணத்தைத் திட்டமிடப்படி தேசிய சேமிப்பு வங்கிக்குத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்பதாகும்.
மஹிந்த ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி.








Loading...