இலங்கையின் புதிய அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து 2 பில்லியன் டொலர்கள் வரை கடன் பெறத் திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வியாழன்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விபரத்தை வெளியிட்டார் .
அரசாங்கத்தின் ஐந்து வருட பதவிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும், சந்தை பெறுமதியை பொறுத்து இரண்டு பில்லியன் வரை அந்த அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்னும் ஒருசில நாட்களில் ஒரு பில்லியன் டொலர்களை கடனாக பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும்,எதிர்காலத்தில் இது இரண்டு பில்லியன்களாக அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருமானத்தை மிகைப்படுத்தி, திட்டமிட்டு செலவீனங்களை குறைப்பதற்கு முன்னைய அரசாங்கம் செயற்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னைய அரசாங்கம் அதிக வட்டிக்கு வெளிநாட்டில் கடன்களை பெற்றுக்கொண்டதாகவும், தற்போதைய அரசாங்கம் குறைந்த வட்டி வீதத்தில் கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.