Tuesday, 23 June 2015

புதிய அரசாங்கத்தில் 30 அமைச்சர்களே இருப்பர்: ஜனாதிபதி!















பொதுத்தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தில் 30 அமைச்சர்கள் மாத்திரமே இருப்பர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த அமைச்சர்கள் தொகை அரசாங்கங்கள் மாறினாலும் மாற்றப்படாத வகையில் தேசியக்கொள்கை ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களின் தொகையை மாற்றுவது அல்லது அமைச்சர்களின் பொறுப்புக்களை மாற்றுவது போன்ற நடவடிக்கைகள், நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், நாட்டின் முக்கிய திட்டங்கள் தொடர்பில் தேசிய கொள்கைகள் வகுக்கப்படல் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.


Loading...