இயந்திர கோளாறு காரணமாக 510 பயணிகளுடன் பெரிய விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையதில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான A-380 என்ற குறித்த விமானம் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலிருந்து டுபாய் நோக்கி பயணித்து கொண்டிருந்த போது ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
