Wednesday, 24 June 2015

பொதுத் தேர்தலுக்கு அம்பாறை மாவட்டத்திட்கான வேட்பாளர் விண்ணப்பம் கோரல்


நாட்டின் அபிவிருத்தி மற்றும் சமத்துவத்தைக் குறிக்கோளாக கொண்ட தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி தனது நேரடி அரசியல் பிரவேசத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மேற்கொள்ள இருக்கிறது. ஒட்டகம் சின்னத்தை  கடந்தசில நாட்களுக்கு முன்னர் தமது கட்சியின் சின்னமாக அறிவித்திருந்த தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி எதிர்வரும் பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் களமிறங்க உள்ளது.இந்த கட்சியில் தேர்தலில் களமிறங்க விரும்பும் அம்பாறை மாவட்டத்தை வதிவிட மாவட்டமாக கொண்ட விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பத்தை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.சிந்தனை புரட்சியாளர்களையும்,தாயக மண்ணில் சிறந்த பொருளாதாரத்துடன் கூடிய அபிவிருத்தியை விரும்புபவர்களையும் இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.உங்களைப் பற்றிய தகவல்,தகமை , எமது கட்சியில் இணைந்து தேர்தலில் கேட்பதுக்கான காரணம் மற்றும் நோக்கம் பற்றிய விபரம்களை ndphrinfo@gmail.com எனும் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.உங்களுக்கான நேர்முக கலந்துரையாடலுக்கான  திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
 தகமை: அம்பாறை மாவட்ட பிரஜையாக இருக்க வேண்டும். 
  தொடர்புகளுக்கு: செயலாளர் 
                                    நிறைவேற்று அதிகார குழு 
                                    தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி
                                       ndphrinfo@gmail.com
Loading...