இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இருநாட்டு உறவுகள் மற்றும் தற்கால அரசியல் நிலை உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் கலந்துகொண்டிருந்தார்.
இதேவேளை நேற்று இரவு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வரவேற்றார்.
