Friday, 19 June 2015

நாடு தழுவிய ரீதியில் ஹர்த்தால்.

புதிய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கு உட்பட கொழும்பு மற்றும் மலையகப் பிரதேசங்களில் ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஜேவிபி ஆகிய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஹர்த்தாலை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய தேர்தல் முறை மாற்றத்தின் பிரகாரம் 165 ஆக இருந்த தேர்தல் தொகுதிகள் 137 ஆக குறைக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 137 ஆக குறைக்கப்பட்டமை தமிழ் முஸ்லீம் மக்களையும் சிறிய சிங்களக் கட்சிகளையும் பாதிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஒன்றுகூடிக் கலந்துரையாடிய இந்த அரசியல் கட்சிகள் வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து வலியுறுத்துவது என முடிவு செய்துள்ளன.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பது என்றும் சந்திப்பில் சாதகமான முடிவில்லையானால் நாடுதழுவிய ஹர்த்தால் போராட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.
வர்த்தமானி அறிவித்தலின் படி 237 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 137 தொகுதிவாரியாகவும் 75 பேர் விகிதாசார முறையிலும் ஏனைய 25 பேர் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...