பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச சற்றுமுன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்குச் சென்றுள்ளார்.
காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சஷி வீரவன்சவிடம் தற்போது விசாரணை செய்யப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 28ம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்ட சஷி வீரவன்ச அன்று வர முடியாது என கூறிய நிலையில் இன்று விசாரணைக்கு சென்றுள்ளார்.
