Thursday, 11 June 2015

இஸ்லாமிய அரசு 'மரணத்தை வழிபடும் குழு': ஆஸி. பிரதமர்

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பொட்
இஸ்லாமிய அரசு என்பது உலகளாவிய பேராசைகள் கொண்ட-மரணத்தை வழிபடும் குழு என்றும் அது எதிர்க்கப்பட வேண்டியது என்றும் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பொட் கூறியுள்ளார்.
சிட்னியில் தொடங்கியுள்ள ஆசிய-பசிபிக் மாநாட்டில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர், பயங்கரவாதம் தான் பிராந்தியத்தின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால் என்று கூறியுள்ளார்.
பயங்கரவாதம் என்பது அர்த்தமற்றது என்று மக்களுக்கு புரியவைப்பது தான் அதற்கு எதிரான பலனுள்ள பாதுகாப்பு நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இராக்கிலும் சிரியாவிலும் நூற்றுக்கும் அதிகமான ஆஸ்திரேலிய பிரஜைகள் ஜிஹாதிய குழுக்களுடன் சேர்ந்து போரிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
Loading...