2009ம் ஆண்டில் இராணுவ ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களின் சர்வதேச வலையமைப்பு மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வௌ்ளிக்கிழமை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கையில் எவ்வித தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தியாவிலுள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
