Thursday, 25 June 2015

அமைச்சர் ஹசன் அலியின் ஏற்பாட்டில் இன்று சிற்றுழியர்களுக்கான நேர்முகப்பரீட்சை













மத்திய சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலியின் ஏற்பாட்டில் சிற்றுழியர்களுக்கான நேர்முகப்பரீட்சை இன்று முதல் கொழும்பிலுள்ள சுகாதார அமைச்சில் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அம்பாரை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலிருந்தும் நேர்முகப்பரீட்சைக்கு இளைஞர்கள் கட்சி முக்கியஸ்தர்களின் சிபார்சின் அடிப்படையில் அழைக்கப்பட்டுள்ளனர். 

நேர்முகப்பரீட்சை முடிந்ததும் அடுத்த வாரம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கப்படவுள்ளதாக சுகாதார ராஜாங்க அமைச்சரின் வட்டாரத்தில் இருந்து தெரியவருகின்றது.இதேவேளை, கிழக்கு மாகாண சுகாதார,சுதேச வைத்தியத்துறை அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரின் ஏற்பாட்டிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு இன்று முதல் நேர்முகப்பரீட்சை நடைபெறவுள்ளது.

இந்நேர்முகப்பரீட்சை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தற்போது ஆரம்பமாகியுள்ளது. இந்நேர்முகப்பரீட்சை தொடர்ச்சியாக ஐந்து தினங்களுக்கு இமட்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...