முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்நாட்டின் பிரதமராவதற்கு சிறிதளவேணும் இடமில்லை என்று சிரேஷ்ட சோதிடர் இந்திக்க தொடவத்த எதிர்வு கூறியுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற மாட்டாரென சிரேஷ்ட சோதிடர் இந்திக்க தொடவத்த தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டுவருகின்ற இத்தருணத்தில் இவ்வாறானதொரு எதிர்வுகூறல் விடுக்கப்பட்டுள்ளது.
சிலையொன்று செதுக்கி, மக்கள் வெள்ளத்தின் மத்தியில் வீதியில் எடுத்துச் செல்லப்படும் நபராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒருகாலத்தில் தோன்றினார்.
ஆனால் அவரது முகத்தில் அவரே சேற்றை வாரி இட்டுக்கொண்டதாக சிரேஷ்ட சோதிடர் இந்திக்க தொடவத்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எவ்வித கிரகப் பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
