அமெரிக்க டாலருக்கு எதிரான இலங்கையின் பணமதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஸ்பாட் கரன்சி சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கையின் பணமதிப்பு ரூபாய் 134-ஆக வீழ்ச்சியடைந்தது.
அரசியல் நிலையற்ற தன்மை, ஏற்றுமதியாளர்களிடம் தொடர்ந்து அதிகரித்து வரும் டாலருக்கான தேவை, வெளிநாடுகள் தொடர்ந்து ரூபாய் பாண்டுகளை விற்று வருவது உள்ளிட்ட காரணங்களால் இலங்கையின் பணமதிப்பு தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
டாலருக்கு எதிரான தேவை உலகெங்கும் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இலங்கையின் பணப்பரிமாற்ற மதிப்பை சந்தைகளே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் அர்ஜூனா மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பு வீழ்ச்சி குறித்து இலங்கையி்ன் நிதி மந்திரி ரவி கருணாநாயகே கூறுகையில், நடப்பு வாரத்தில் சர்வதேச வங்கிகளிடமிருந்து 2 பில்லியன் டாலர்கள் வரை சிண்டிகேட் கடன்கள் வாங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.
