அரசாங்கம் ஏன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வெகுவாக அஞ்சுகின்றது என முன்னாள் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ அரசியலில் ஈடுபடுவதனை தடுக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது மேலும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். 100 நாள் திட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்பற்றப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
