Tuesday, 16 June 2015

கவிதை - மத்திய கிழக்கும் மண வாழ்க்கையும்





இல்லறம் கொண்ட சில நாட்களில்
நல்லறம் கொண்ட அந்த நாட்களின்
நினைவலைகளை தாங்கியவனாய்
மனைவியிடமிருந்து விடை பெற்றான்...

கன நாள் கனவுகள் சிதைந்திடினும் 
கண்கள் கலங்கி கண்ணீர் சொட்டினும்
கண்ணீரைத் துடைத்து அகம் தேற்றி
கணவனை வழியனுப்பி விட்டாள்...

மணம் கொண்ட மறு மாதமே அவன்
மத்திய கிழக்கிற்கு சென்று விட்டான்
தாங்காத் துயருடன் பிரிந்திட்டவர்கள்
ஏங்காத நேரமில்லை மனம் நொந்து..!

வேலை வாய்ப்புக்காய் அவன் அங்கே
வேதனைகளை சுமந்தவளாய் அவள் இங்கே
இணையத் தொடர்பாடல் ஒன்றுதான்
துணைகளின் துயரை சற்று துடைக்கிறது...

விடை பெற்றவன் மறு விடுமுறைக்காய்
விடியல்களை எண்ணியபடி காத்திருக்க
துணைவியவள் கணவனின் வருகைக்காய்
துயருடன் காத்திருக்கிறாள்...!



                                                                     -பாஸித் மருதான்










-
Loading...